USB
PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும்
அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு
இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB
PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.
இதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி பார்ப்போம்
REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,
RUN----->TYPE " regedit "
REGISTRY EDITOR சென்றவுடன்,
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
மேலே உள்ள PATH க்கு சென்று பின்,
START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும்,
அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்றவேண்டும். (படம் 2).
பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை ("3") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .


YOU
TUBE தளத்தில் இருக்கும் வீடியோவை நேரிடையாக தரவிறக்கம் செய்ய அந்த
தளத்தில் எந்த ஒரு வசதியும் இல்லை. YOU TUBE வீடியோக்களை தரவிறக்கம் செய்ய
வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளை நாட வேண்டும்.
இவ்வாறு நாம் YOU TUBE தளத்தில் இருந்து பதிவிறக்கும் வீடியோக்கள்
அனைத்தும் .flv பைல் பார்மெட்டில் இருக்கும். இந்த வீடியோ பைலானது .flv
பைல் பார்மெட்டை சப்போர்ட் செய்யக்கூடிய பிளேயர்களில் மட்டுமே பார்க்க
முடியும். மற்ற வீடியோ பிளேயர்களில் .flv வீடியோவை பார்க்க முடியாது. இந்த
.flv வீடியோ பைல் பார்மெட்களை கன்வெர்ட் செய்து மற்ற வீடியோ பைல்
பார்மெட்டாக மாற்ற பல இலவச வீடியோ கன்வெர்ட்டர்கள் இணையத்தில் கிடைக்கிறன.
அவை எதுவும் சிறப்பானதாக இல்லை.மென்பொருளை தரவிறக்க சுட்டி
![]() |
| இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளுக்கான லைசன்ஸ் கீயானது மென்பொருளை தரவிறக்கம் செய்து போது சேர்ந்தே தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். மென்பொருளை கணினியில் நிறுவியபிறகு கீயை பயன்படுத்தி Register செய்து கொள்ளவும். |
![]() |
| Convert என்னும் பொத்தானை அழுத்தி .flv வீடியோ பைலை தேர்வு செய்து
கொள்ளவும். இப்போது கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பார்மெட்டை தேர்வு
செய்து கொள்ளவும்.
இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோவை கன்வெர்ட் செய்வது
மட்டுமல்லாமல், YOU TUBE வீடியோவையும் தரவிறக்கம் செய்து கொள்ளவும்
முடியும்.
|
![]() |
ஆடியோ
மற்றும் வீடியோ கட், கன்வெர்ட் மற்றும் ஜாயின் செய்வதற்கு பல
மென்பொருள்கள் உள்ளன. மேலும் ஒரே மாதிரியான ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள்
இணைக்கவும் அதிகமான மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன.
ஒரு வீடியோவின் ஆடியோ மட்டும் இரத்து செய்து நமக்கு விருப்பமான ஆடியோவை
இணைத்துகொள்ளும் மென்பொருள்கள் குறைவு, இதுபோன்ற மென்பொருட்கள் யாவும் விலை
கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இல்லையெனில் இணையத்தில் இருந்து இலவசமாக
மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அவ்வாறு கிடைக்கும்
மென்பொருட்கள் யாவும் சிறப்புடையதாக இல்லை.இதுபோன்ற குறைகள் யாவும்
இல்லாமல் இணையத்தில் இலவசமாக ஒரு மென்பொருள் கிடைக்கிறது.மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் Add Video என்னும் பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட வீடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும். பின் Add Audio என்னும் பொத்தானை அழுத்தி எந்த ஆடியோ பைலை இணைக்க வேண்டுமோ அந்த ஆடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும். பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும். mp4, swf, wmv மற்றும் flv இவற்றில் எதாவது ஒரு பைல் பார்மெட் ஆகும்.
பின் கன்வெர்ட் செய்த பைலானது எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தெரிவு செய்து கொண்டு. Start பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய வீடியோவானது பிரிதொரு ஆடியோ இணைக்கப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேவ் செய்யப்பட்டிருக்கும். ஏதோ ஒரு வீடியோவிற்கு நீங்கள் விரும்பும் ஆடியோவை இணைத்து பாருங்கள்
உங்களது கடவுச்சொற்கள் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்ள சிறிய மென்பொருள்
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மின்னஞ்சல் கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச் சொல் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியம்.இச்சூழ்நிலையில் உங்களது கடவுச்சொல்லை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவி புரிகிறது. இதில் உங்களது அனைத்து கடவுச் சொல்லையும் சேமித்து வைத்து இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு கடவுச்சொல் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
1. எந்தவொரு நபரும் உங்களது கடவுச் சொல்லை திருடாத படி கடினமான கடவுச்சொல் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.
2. குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த கடவுச் சொல்லாக தெரிவு செய்யும் வசதி.
3. மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித் தனியான கடவுச் சொல் கொடுத்து சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி.
4. Potable மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது.
இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தால் வரும் ZIP கோப்பை Extract செய்து Key pass என்ற கோப்பை open செய்யுங்கள். அதன் பின் தோன்றும் window-வில் அதில் உள்ள New என்ற button அழுத்தவும்.
அதன் பின் தோன்றும் window-வில் உங்களின் Master password தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன்பின் வரும் window-வில் உங்களின் password வகையை தெரிவு செய்து கொண்டு Add Entry என்ற button அழுத்தி உங்கள் password சேமித்து கொள்ளலாம். இதே முறையில் உங்களையுடைய அனைத்து கடவுச் சொற்களையும் சேமித்து கொள்ளுங்கள்.

இதற்கு Tools – password generate சென்று கடினமான கடவுச்சொற்களை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் உருவாகும் கடவுச் சொல் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய - http://download.cnet.com/KeyPass/3000-2092_4-10327427.html
Bootable CD/DVD உருவாக்குவது நீங்கள் நினைப்பதை விட எளிது.
1. உங்களிடம் உள்ள ஒரு CD/DVD யை எவ்வாறு ஒரு ISO/NRG இமேஜ் கோப்பாக காப்பி செய்து வைப்பது.2. நீங்கள் ஏற்கனவே ஒரு விண்டோஸ் CDயை உங்களின் கணினியில் காப்பி செய்து வைத்து இருந்தால் அந்த கோப்புகளை எவ்வாறு ஒரு ISO இமேஜ் கோப்பாக மாற்றுவது.
3. ISO கோப்புகலாக உள்ள உங்களின் விண்டோஸ் பதிப்பை எவ்வாறு ஒரு Bootable CD/DVD யாக எழுதுவது என இந்த வீடியொவில் சொல்லி உள்ளேன். உங்களின் கேள்விகளை இங்கே கேட்கவும்.
http://sourceforge.net/projects/iso-creator-cs/








கணணி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு!!
முழுநீள
வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும்.
எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி
காட்சியோ தேவைப்படலாம்.




0 comments:
Post a Comment